வங்கதேசத்தில் இருந்து தப்பித்து செல்ல 5 நிமிடங்கள் கூட உங்களுக்கு கிடையாது என்று அந்த நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ்க்கு எதிராக இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் கட்சி தலைவர்கள், அமைப்பினர் கடுமையாக வார்னிங் செய்துள்ளனர்.வங்கதேசத்தில்
�
கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.முகமது யூனுஸ் நம் நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு என்பது மிகவும் மோசமாகிவிட்டது.
�
இந்நிலையில் தான் முகமது யூனுஸ்க்கு எதிராக இஸ்லாமிய கொள்கைகளை கடுமையாக கடைப்பிடித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் திரும்பி உள்ளனர். மேலும் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையானபோது ஷேக் ஹசீனா இந்தியா தப்பிக்க 45 நிமிடங்கள் வரை கிடைத்தது. ஆனால் முகமது யூனுஸ் தப்பிக்க 5 நிமிடங்கள் கூட கிடைக்காது என்று வார்னிங் செய்துள்ளனர். இந்நிலையில் தான் வங்கதேசத்தில் இஸ்லாமிய கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்கும் அரசியல்
�
கட்சி, அமைப்புகள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடந்தது.வங்கதேச தலைநகர் டாக்காவில் ‛பெண்கள் விவகார சீர்திருத்த ஆணையத்தில் இஸ்லாமிய வெறுப்பு: நாம் என்ன செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. அதில் வங்கதேச ஜமாத்தின் தலைவராக உள்ள சபியூர் ரஹ்மான் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: வங்கதேசத்தி்ல பெண்கள் சீர்த்திருத்த ஆணையம் சார்பில் இஸ்லாமிய கொள்கைகக்கு எதிரான சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை
�
செயல்படுத்த கூடாது. மீறி செயல்படுத்தினால் நாட்டில் பெரும் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.அதேபோல் இந்த கருத்தரங்கில் வங்கதேச இஸ்லாமிக் மூமெண்ட் என்பதன் அமீர் முஃப்தி சையத் ரெசால் கரீம்கூறுகையில், ‛‛இந்த பரிந்துரைகளை செயல்படுத்த கூடாது. மீறினால் நீங்கள் தப்பிக்க 5 நிமிடம் கூட கிடைக்காது” என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஹசீனா தப்பிக்க 45 நிமிடங்கள் வரை
�
கிடைத்தது. ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தினால் தப்பிக்க 5 நிமிடம் கூட வழங்கமாட்டோம். எங்களிடம் சிக்கிவிட்டால் மோசமான விளைவு ஏற்படும் என்பதை தான் அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.இந்த வார்னிங்கின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது வங்கதேசத்தில் தற்போது பெண்கள் சீர்திருத்த ஆணையம் சார்பில் சில சீர்த்திருங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை முகமது யூனுஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமிய
�
கொள்கைகளுக்கு எதிராகவும், மேற்கத்திய கலாசாரத்துக்கு ஏற்பவும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் இந்த பெண்கள் சீர்த்திருத்த ஆணையத்தின் சீர்த்திருத்தங்களை கொண்டு வரக்கூடாது. மீறினால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
