உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், ‘பலுச்சிஸ்தான்’ என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், ‘பக்தூனிஸ்தான்’ கோருகின்றனர்.
பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷின்ஜியாங் மாகாண மக்களின் தனி நாடு கோரிக்கை, இலங்கையில் தனித் தமிழ்தேசம் கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களும் உலகம் அறிந்ததே.
ரஷ்யாவில் செசென்யா மக்கள் தனிநாடு கோரினால், யுக்ரேனில் கிழக்குப் பகுதி மக்களின் கோரிக்கையும் தனி நாடே. இது மட்டுமா? பிரிட்டனில் இருந்து பிரிய வேண்டும் என்று ஸ்காட்லண்டு விரும்புகிறது.ஐரோப்பாவில் இருந்து ஸ்பெயினின் கைடலோனியா பிராந்தியம் பிரிவது குறித்து அக்டோபர் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிபர் கார்லஸ் புஜ்டேமான் ஜூன் மாதத்தில் அறிவித்தார். இதேபோல், இராக்கில் குர்த் இன மக்கள் தனிநாடு கோருகின்றனர் நாட்டை பிரிக்க அரசாங்கங்கள் தயாராக இல்லை
தனிநாடு கோரிக்கைகள் எழுவது உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, சம்பந்தப்பட்ட நாட்டில் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் அரசுகள் நாட்டைப் பிரிக்கவோ, விடுதலை கொடுக்கவோ தயாராக இல்லை. கோரிக்கைகள் வலுத்து ஒலித்தாலும், உள்நாட்டு யுத்தங்கள் வலுத்தாலும், அவை நீண்ட காலம் தொடர்ந்தாலும், தனிநாடு கோரிக்கைகள் முடக்கப்படுகின்றன.
தனிநாடு கேட்கும் உரிமை யாருக்கு இருக்கிறது? என்பது தான் நம் முன்னே இருக்கும் இமாலயக் கேள்வி. இதற்கான பதிலை ஆராய்கிறார் பிபிசியின் ஜேம்ஸ் ஃப்லெச்சர்.
முந்தைய காலங்களில் புஜபலத்தையும், ஆயுத பலத்தையும் கொண்ட நாடுகளின் உரிமைகளும், நாடுகளின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. மாபெரும் யுத்தங்களும், போர்களுமே நாடுகளின் சாம்ராஜ்யங்களையும், அரசர்களையும் முடிவு செய்தன.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தின் பத்திரிக்கை செய்திகள்
இந்திய எல்லை கோடு தொடர்பான குறிப்புகள் எரிக்கப்பட்டதா?
கிரேக்க மாவீரர் அலெக்சாண்டர், மங்கோலியாவின் செங்கிஸ்கான், மத்திய ஆசியாவின் தைமூர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம்.
வென்ற இடத்தை, ஆட்சி செய்வார் அரசர். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் போர்களால் ஏற்பட்டது மாபெரும் பேரழிவு. பலத்தைக் கொண்டு நாட்டை விரிவாக்கும் முயற்சிகளால் நாடுகளிடையே நடக்கும் போர்களால் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்கிறது வரலாறு.
