இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடன் 1960 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது.மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இந்த செனாப் நதி பாய்கிறது. இது கடந்த 5 நாட்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு
�
ஓடுகிறது.ஏப்ரல் 26 (சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான முடிவை இந்தியா பாகிஸ்தானுக்குத் தெரிவித்த நாள்) மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் அங்கே ஓடிய நீரின் அளவு ஒப்பிடப்பட்டு உள்ளன. ஏப்ரல் 26ம் தேதி அங்கே தண்ணீர் ஓடிய நிலையில் ஏப்ரல் 29ம் தேதி தண்ணீர் இன்றி வற்றியது. இந்த நாட்களுக்கான செயற்கைக்கோள் படங்களின் மூலம் சியால்கோட்டில் பாயும் செனாப் நதி முற்றிலுமாக வற்றி நீர் இன்றி காணப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த
�
நதியை நம்பி இருப்பவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தியா எடுத்த முடிவு ஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக
�
கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான
�
கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. மற்ற முடிவுகள் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த
�
சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. Al சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது
�
இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் “தனிநபர் அல்லாதவர்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே
�
இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள் உடனே வெளியேற வேண்டும். இதற்கு 1 வாரம் அதிகபட்சம் டைம் தரப்படும். அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
