2 ஆக உடையும் பாகிஸ்தான்.. இந்தியா உடனான மோதலுக்கு நடுவே பலூச் மக்கள் போர் அறிவிப்பு
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் மக்கள் போரை அறிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற பலூச் மக்கள் அந்த நாட்டுக்கு எதிராக போரை அறிவிக்க வேண்டும். பாகிஸ்தான் காலம் காலமாக பலூசிஸ்தான் மக்களின் வளங்களை கொள்ளையடித்து, வறுமை, பசியில் தள்ளுகிறது. இதனால் சுதந்திரத்துக்கான போரை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்று பலூச்
நேஷனல் மூமெண்ட் இயக்கத்தின் தலைவர் நசீம் பலூச் கூறியுள்ளார். இந்த போர் தொடங்கும்பட்சத்தில் பலூச் மக்கள் வென்றால் பாகிஸ்தான் 2 ஆக உடையும்.இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக நம் நாடு விரைவில் பாகிஸ்தானை ‛அட்டாக்’ செய்ய உள்ளது.இதற்காக
முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தாக்குதல் நடத்தும் நேரம், தாக்குதல் நடத்தப்போகும் இடங்களை சம்பந்தப்பட்ட படையினரை முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி முழு சுதந்திரம் வழங்கி உள்ளார். இதனால் பாகிஸ்தான் நம் நாட்டை பார்த்து அஞ்சி நடுங்கி வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் தேசிய இயக்கம் (BNM or Baloch National Movement) போரை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பஷ்டூன் ஃபுஸ் இயக்கம் சார்பில் நிகழ்ச்சி ஜெனீவா பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பலூச் தேசிய
இயக்கத்தின் தலைவர் நசீம் பலூச் பேசும்போது பாகிஸ்தானுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛பலூச் மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அடக்குமுறையை கையாள்கிறது. இன்ப்படுகொலையை செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு அரசுக்கு எதிராகவும், பலுச் மற்றும் சிந்து மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் போரை அறிவிக்க வேண்டும். நாம் அனைவரும் பொறுமையாக காத்திருக்கும் நேரம் முடிவுக்கு வந்துவிட்டது. இது சுதந்திரத்துக்கான நேரம்.ஒடுக்கப்பட்ட மக்கள்
அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பலூச், பஷ்டூன் மக்கள் இனியும் காத்திருக்க வேண்டும். சுதந்திரத்துக்கான போராட்டத்தை அறிவிக்க வேண்டும். பலூச் மற்றும் சிந்து மாகாண மக்களை கொல்வது, கடத்துவது, இரண்டாக பிரிப்பது, பொருளாதார சுரண்டல் உள்ளிட்ட தந்திர வேலைகளை பாகிஸ்தான் அரசு செய்கிறது. இதனை மீறி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.பாகிஸ்தான் அரசு பல தசாப்தங்களாக நமக்கு துரோகம் இழைத்து வருகிறது. ரத்த பலி வாங்கி உள்ளது. பலுசிஸ்தானில் இருக்கும் தங்கம், தாமிரம் எரிவாயு உள்பட பல வளங்களை பாகிஸ்தான் சுரண்டுகிறது.
அதோடு நம் மக்களை வறுமை, பசி, நோயுடன் போராட வைக்கிறது. எங்களை பொறுத்தவரை நாங்கள் சமத்துவத்தை தான் தேடுகிறோம். சலுகைகளை கேட்கவில்லை. எங்களின் உரிமைகளை தான் கேட்கிறோம். இதனால் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார். பலூச் தேசிய இயக்கத்தின் தலைவர் நசீம் பலூச்சின் இந்த பேச்சின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணம் தான் பலுசிஸ்தான். இந்த மாகாணம் என்பது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை பாகிஸ்தான் கண்டுக்கொள்வது இல்லை. மக்கள் பசி, பட்டினியால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் இருந்தாலும் கூட இந்த பலூச் மக்கள் தங்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறி கொள்வது இல்லை. ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு தனி நாடு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.மேலும் பலுசிஸ்தானை தனி நாடாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பிரிவினைவாத படைகள் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் பலுச் விடுதலை ராணுவம். இவர்கள் பாகிஸ்தானுடன் நீண்டகாலமாக மோதி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்த அமைப்புக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பெரிய பிரச்சனை நடந்தது. இந்த பலுசிஸ்தானில் கனிமவளங்கள் நிறைய உள்ளன. இதனை சீனாவுடன் சேர்ந்து
பாகிஸ்தான் அபகரித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தான் பலுசிஸ்தானில் இயங்கும் போராளி அமைப்பினர் மற்றும் அதன் தலைவர்கள் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் தற்போது போரை அறிவிக்க வேண்டும் என்று பலூச் தேசிய இயக்கத்தின் தலைவர் நசீம் பலுச் தெரிவித்துள்ளார்.இதனால்
பாகிஸ்தான் தற்போது பெரிய சிக்கலில் உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி உள்ளது. மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் ஒருபக்கம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சனை உள்ளது. தண்ணீர், மருந்து சப்ளை, உணவு தானியங்கள் சப்ளையை இந்தியா நிறுத்தி உள்ளது. மேலும் பாகிஸ்தானை தாக்கவும் நம் நாடு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் மறுபுறம் இன்னொரு எல்லையில் பலூச் விடுதலை போராளிகள் போரை அறிவிக்க தயாராகி வருகின்றன. இது ஒன்றாக நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ராணுவத்தால் சமாளிப்பது ரொம்ப கடினம். அதோடு பலுசிஸ்தான் தனி நாடாக செயல்படுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம். இதனால் பாகிஸ்தான் பெரும் சிக்கலில் மாட்டி உள்ளது.