உழைப்பாளர் தினத்தை நினைவுகூரும் வகையில் மே தினமான இன்று , கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடைபெறும் மே தின பேரணிக்காக, தேசிய மக்கள் சக்திக்காக (NPP) சுமார் 5,532 பேருந்துகள் வரும் என்று பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பதில் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) இந்திக ஹபுகொட, சுமார் 221,000 பேர் பேருந்துகள் வழியாக வருவார்கள் என தென்னிலங்கை ஊடகத்திடம் கூறியுள்ளார்.கொழும்பு முழுவதும் 2000 பொலிஸ் அதிகாரிகள்
கான் ரவுண்டபௌட், கோட்டை ரயில் நிலையம், ரீகல் சினிமா, பழைய மானிங் சந்தை, காமினி ரவுண்டபௌட், பாலதக்ஷா மாவத்தை, காலி மத்திய வீதி, ஊட் MOD பகுதி, இலங்கை விமானப்படை கட்டிடத்திற்கு முன்புறம்,சர் சித்தம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொள்ளுப்பிட்டி சந்திப்பு மற்றும் கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.கொழும்பில் இன்று போக்குவரத்து முகாமைத்துவத்திறகாக 85 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சிவில், சிறப்புப் படை மற்றும் புலனாய்வுப் பிரிவு உட்பட சுமார் 2000 பொலிஸ் அதிகாரிகளும் கொழும்பு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
