பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் நிலைமை மோசமாகி வருவதாகவும், அந்த நாடு 3 ஆக பிரிய வாய்ப்புள்ளதாகவும் பிரபலம் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பைசாரன் புல்வெளி உள்ளது. ‛மினி ஸ்விட்சர்லாந்து’ என அழைக்கப்படும்
�
என்ற இடம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கடந்த 22ம் தேதி 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற அமைப்பின் துணை பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு
�
ஏற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றியும், இந்தியா பதிலடி கொடுக்க வேண்டியது பற்றியும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் டிரிஷ்டி ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் திவ்யகீர்த்தி தொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இவர் அடிக்கடி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அதனை
�
கையாள்வது பற்றி பேசும் வீடியோ என்பது இணையதளங்களில் அதிக கவனம் பெறும். அந்த வகையில் தான் தற்போது ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்தும், பாகிஸ்தானின் நிலைமை பற்றியும் அவர் பேசியிருக்கும் கருத்துகள் தொடர்பான வீடியோ அதிக கவனம் பெற்றுள்ளது. அதில் திவ்யகீர்த்தி பேசியதாவது பாகிஸ்தான் மீது பலரும் கோபமாக இருக்கின்றனர். பலருக்கும் ரத்தம் கொதிக்கிறது. இதனால் தான் இந்த சம்பவம் பற்றி பேச தயாராகி உள்ளேன். பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக உள்ள
�
பலூசிஸ்தான் மற்றும் சிந்து ஆகியவற்றில் பிரச்சனைகள் உள்ளது. பலூசிஸ்தானில் பதற்றமாக சூழல் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அது பாகிஸ்தானில் இருந்து பிரிய வாய்ப்புள்ளது. அதேபோல் சிந்து மாகாணம் பிரிவது காலம் தாமதமானாலும் கூட அதுபற்றி எந்த நேரத்திலும் புதிய செய்திகள் வரலாம். (பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாண மக்கள் தனி நாடு கேட்டு போராடி வருவதை குறிப்பிடுகிறார்).இதனால் பொதுவாக கடினமான சமயங்களில் உணர்ச்சிப்பூர்வமாக கோபத்தில் முடிவெடுக்க
�
கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் நிலைமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாட்டின் நிலைமையை யாரும் மறைக்கவில்லை. பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. பொதுமக்கள் பசியால் துடித்து இறந்து கொண்டிருக்கிறார்கள். உள்நாட்டு போர் போன்ற நிலை அங்கு நிலவி வருகிறது. இந்த விஷயங்களில் இருந்து பாகிஸ்தான் மக்களை திசைதிருப்ப அந்த நாட்டின் ராணுவம் முயற்சி செய்கிறது. இதனால் தான் காஷ்மீர் தாக்குதல் நடந்து
�
இருக்கலாம்.மேலும் பஹல்காம் தாக்குதலை எடுத்து கொண்டால் உள்ளூர் மக்களின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் யாராவது தன்னைத்தானே காலில் சுட்டுக் கொள்வார்களா? காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தால் அது அங்குள்ள சுற்றுலா துறை மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் சுற்றுலா வணிகம் பாதிக்கப்படும். இதற்கு முன்பு 22 லட்சம் முதல் 25 லட்சம் பேர் தான் சுற்றுலா சென்றனர். இப்போது இரண்டரை கோடி பேர் சுற்றுலா செல்கின்றனர். இதனை உள்ளூர் மக்கள் கெடுத்து கொள்ள விரும்பமாட்டார்” என்றார். இதன்மூலம் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளூர் மக்களின் பங்கு இருக்காது என்று அவர் கூறினார்.
