மே 5 முதல் SALE.. CMF Phone 2 Pro அறிமுகம்.. FREE சார்ஜர், 16GB ரேம், 50MP EIS கேமரா, IP54 ரேட்டிங்.. விலை சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போன் இன்று (ஏப்ரல் 28) இந்தியாவில் அறிமுகமானது.இது இது – நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனமான – சிஎம்எப் பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும். சிஎம்எப் போன் 2 ப்ரோ
�
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: – டூயல் சிம் (நானோ+நானோ) – ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 3.2 – 3 ஆண்டுகளுக்கு மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் – 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச்கள் 6.77 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே – 1080 × 2392 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் – 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் – 2160Hz PWM
�
ப்ரெக்வன்சி – 387ppi பிக்சல் டென்சிட்டி – 480Hz டச் சாம்ப்ளிங் ரேட் – 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் – HDR10+ ஆதரவு – பாண்டா கிளாஸ் ப்ரொடெக்ஷன் – ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 ப்ரோ சிப்செட் – 8ஜிபி வரை ரேம் – ரேம் பூஸ்டர் அம்சத்தின் கீழ் ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்க முடியும். – 2டிபி வரை மெமரி விரிவாக்கத்தை ஆதரிக்கும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் – தூசி மற்றும் தெறிப்பு எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் – இரண்டு மைக்ரோஃபோன்கள் – ஒரு எசன்ஷியல் பட்டன் (இது ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள் மற்றும் வாய்ஸ் நோட்கள் போன்ற
�
டேட்டாவை அணுக உதவும் புதிய எசன்ஷியல் ஸ்பேஸ்-ஐ விரைவாக அணுக அனுமதிக்கிறது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் – எப்/1.88 மற்றும் EIS உடன் 50 மெகாபிக்சல் 1/1.57-இன்ச் சென்சார் – எப்f/1.88 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா – எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 119.5-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா – டெலிஃபோட்டோ கேமராவில் 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 20x டிஜிட்டல் ஜூமிங் திறன் உள்ளது – எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா – மேம்படுத்தப்பட்ட கேமரா அவுட்புட்டிற்காக
�
நத்திங் ட்ரூலென்ஸ் எஞ்சின் 3.0 (Nothing’s TrueLens Engine 3.0) தொழில்நுட்பம் 33W பாஸ்ட் சார்ஜிங் – 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் – 5000mAh பேட்டரி – சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 47 மணிநேர அழைப்பு நேரத்தையும், 22 மணிநேரம் வரை யூட்யூப் ஸ்ட்ரீமிங் நேரத்தையும் வழங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. – ரீடெயில் பாக்ஸ்-ல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் ஒரு கேஸ் – 5ஜி ஆதரவு – வைஃபை 6 – ப்ளூடூத் 5.3 – யுஎஸ்பி டைப் சி போர்ட் – – ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் –
�
அளவீட்டில் 164×7.8×78மிமீ – எடையில் 185 கிராம் சிஎம்எப் போன் 2 ப்ரோ விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக், லைட் க்ரீன், ஆரஞ்சு மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். விற்பனை
�
தேதி: மே 5, 2025.சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart), சிஎம்எப் இந்தியா (CMF India) வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை கூட்டாளர்கள் வழியாக வாங்க கிடைக்கும். சிஎம்எப் போன் 1 மாடலை போலவே புதிய சிஎம்எப் போன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனும் யுனிவர்சல் கவர், இன்டர்சேஞ்சபிள் லென்ஸ்கள், வாலட், ஸ்டாண்ட், லேன்யார்டு அல்லது கார்டு ஹோல்டர் (தனித்தனியாக விற்கப்படுகிறது) போன்ற பல்வேறு ஆக்சஸெரீஸ்களுடன் வருகிறது.
