காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெறலாம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துப் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். இத்தகைய
�
சூழலில் பாதுகாப்புத் துறைக்காக இந்தியா எவ்வளவு ஒதுக்கீடு செய்கிறது பாகிஸ்தான் எவ்வளவு ஒதுக்கீடு செய்கிறது என்ற விவரங்களை இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை இந்தியா பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிக தொகையை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எஸ்ஐபிஆர்ஐ என்ற அமைப்பு பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட முதலீடுகளை கண்காணித்து அறிக்கையாக வெளியிடுகிறது.
�
அந்த வகையில் உலக அளவில் பாதுகாப்பு துறைக்கான செலவினங்கள் அடிப்படையில் அதிகமாக பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.2024 ஆம் ஆண்டில் இந்தியா பாதுகாப்புத்துறைக்கு 86.1 பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.6 சதவீதம் அதிகமாகும். அதேவேளையில் பாகிஸ்தான் அரசு தங்களுடைய பாதுகாப்பு துறைக்காக 10.2 பில்லியன் டாலர்களை மட்டுமே
�
ஒதுக்கீடு செய்திருக்கிறது. அந்த வகையில் இந்தியா பாகிஸ்தானை விட ஒன்பது மடங்கு அதிகமாக பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. உலக அளவில் அதிகமாக பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா, இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், நான்காவது இடத்தில் ஜெர்மனியும் இருக்கின்றன. இந்த பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஐந்து
�
நாடுகளும் மொத்தமாக 1635 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கின்றன சீனாவை பொறுத்தவரை 314 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7 சதவீதம் உயர்வு. ஆசிய நாடுகளிலேயே பாதுகாப்பு துறைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக சீனா இருக்கிறது. அதேபோல ஐரோப்பிய நாடுகளுடன் பார்க்கும்போது ரஷ்யா 693 பில்லியன் டாலர்களை பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு
�
செய்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் அதிகமாகும். உக்ரைன் உடனான சண்டை 3 ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு துறை ஒதுக்கீடு இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.அதேபோல ஜெர்மனியின் ராணுவ ஒதுக்கீடு 88.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்து கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 28% அதிகரித்து இருக்கிறது. உலகிலேயே அதிகபட்சமாக போலந்து நாடு தங்களுடைய பாதுகாப்பு துறைக்காக 31% கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது அந்த நாட்டின் ஜிடிபியில் 4.2 சதவீதம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
