பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 25.08.2020 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 165 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஜீப் வாகனத்தை திருடியது மற்றும் 18.12.2023 அன்று வாகனம் வழங்குவதாக உறுதியளித்து 125 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
மேலும், சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் 761850466V என அடையாள அட்டையைக் கொண்ட ரபீக் மொஹம்மட் பாரீஸ் என்பவரை பற்றி தகவல் தெரிந்தால் கொழும்பு குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி – 071 8591735 அல்லது 5ஆம் இலக்க விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி -071 8596507 ஆகியோருக்கு தெரிவிக்கலாம்.
