கனடாவின் தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது

493892369_1002063978737970_1784168494998131683_n.jpg

கனடா தேர்தல் முடிவுகள்; லிபரல் கட்சிக்கு வெற்றி கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும் என கனடாவின் சிபிசி நியுஸ் தெரிவித்துள்ளது.நான்காவது தடவை ஆட்சியை கைப்பற்றும் லிபரல் கட்சி
பொதுச்சபையில் பெரும்பான்மையை பெறுவதற்கு கட்சியொன்று 172 ஆசனங்களை கைப்பற்றவேண்டும்.

லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது தடவை ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அரசாங்கம் பெரும்பான்மை அரசாங்கமா சிறுபான்மை அரசாங்கமா என தெரிவிக்க முடியாது என கனடா ஊடகம் தெரிவித்துள்ளது.இரண்டாம் இணைப்பு

கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது .

21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது.கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 26 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக சிபிசி தெரிவித்துள்ளது

The current image has no alternative text. The file name is: 493892369_1002063978737970_1784168494998131683_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *