இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து தொடர்ந்து இந்தியாவுக்கு குடைச்சல் தருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் தன்னுடைய சொந்த மக்களின் நிலையை ஒரு போதும் கவனித்தது கிடையாது. இதன் விளைவு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து
�
வருகின்றனர்.கோடிக்கணக்கான மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை தொடங்கினால் அதன் பொருளாதார நிலமை மேலும் மேலும் மோசம் அடையும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதன்
�
காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர்.உதாரணமாக பாகிஸ்தானில் ஒரு கிலோ சிக்கன் 798 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரிசி ஒரு கிலோ 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு டஜன் முட்டையின் விலை 332 ரூபாய் ,ஒரு லிட்டர் பாலின் விலை 224 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது . பாகிஸ்தானை சேர்ந்த சுமார் பத்து மில்லியன் மக்கள் மூன்று வேளை உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
�
இப்படி பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை தொடங்குவது பொருளாதார ரீதியாக மேலும் சிக்கலை ஏற்படுத்தும். உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஏற்கனவே பாகிஸ்தானில் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே பெரும்பாலும் நெல் மற்றும் சோளம் விளைவிக்கப்பட்ட நிலையில் காலம் தவறிய மழை, வறட்சி உள்ளிட்டவை காரணமாக விவசாயம் சரிவடைந்துவிட்டது. இதனால் ஏற்கனவே அங்கே
�
உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளில் இருந்து தான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அதற்கும் போதிய அளவிலான வெளிநாட்டு பணம் கையிருப்பு பாகிஸ்தான் அரசிடம் இல்லை. இதன் காரணமாக நடப்பாண்டில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கித் தவிப்பார்கள் என உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
