பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது.பாகிஸ்தானுக்கு போர் உபகரணங்களை கொத்து கொத்தாக துருக்கி அனுப்பி உள்ளது. துருக்கிய விமானப்படையின் C-130 ஹெர்குலஸ், ராணுவ போக்குவரத்து விமானம் உட்பட பல போர் உபகரணங்கள் நேற்று கராச்சிக்கு
�
அனுப்பப்பட்டது.துருக்கியின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். ஆறு துருக்கிய C-130 விமானங்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவத் தளத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு விமானங்கள் மட்டுமன்றி தோட்டாக்கள், கவச உடைகள், ஆயுதங்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று கொத்து
�
கொத்தாக அனுப்பப்பட்டு உள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் எந்தெந்த நாடுகள் இந்தியாவை ஆதரிக்கும், பாகிஸ்தானை ஆதரிக்கும், நடுநிலையாக இருக்கும் என்று
�
பார்க்கலாம்.இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்: அமெரிக்கா – முக்கியமாக மொத்த QUAD கூட்டாண்மை வழியாக அமெரிக்கா ஆதரிக்கும் பிரான்ஸ் – வலுவான உறவு (எ.கா., ரஃபேல் ஜெட்) ரஷ்யா – பாரம்பரியமாக நெருங்கிய நட்பு நாடு (சீனாவுடன் ரஷ்யா நட்பில் இருந்தாலும், இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக உள்ளது). ஆஸ்திரேலியா – QUAD கூட்டாளி ஜப்பான் – QUAD கூட்டாளி யுனைடெட் கிங்டம் – வரலாற்று உறவு
�
உள்ளது., இந்திய புலம்பெயர்ந்தோர் செல்வாக்கு உள்ளது. இஸ்ரேல் – வலுவான உறவு. இரண்டு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு.வியட்நாம் – சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா – ஆச்சரியப்படும் விதமாக, இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொண்டது. பூட்டான், நேபாளம் (நடுநிலை ஆனால் இந்தியாவை நோக்கி சற்று சாய்ந்திருக்கலாம்) பங்களாதேஷ் – இந்தியாவுடனான உறவு
�
பாகிஸ்தான் எதிர்ப்பால் மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ஏறக்குறைய 10-12 நாடுகள் இந்தியாவை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம்.பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள்: சீனா – வலுவான நட்பு. முக்கிய உள்கட்டமைப்பு முதலீடுகள் (CPEC) அதிகம். துருக்கி – காஷ்மீர் பிரச்சனைகளில் பாகிஸ்தானுக்கு குரல் கொடுக்கும் முக்கிய ஆதரவாளர். மலேசியா (அரசாங்கத்தைப் பொறுத்து) – காஷ்மீர் மீதான சில வரலாற்று ஆதரவு காரணமாக பாகிஸ்தான் பக்கம் சாயலாம். கத்தார் –
�
பாகிஸ்தான் உடன் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது. ஈரான் (ஒருவேளை நடுநிலையாக இருக்கலாம், ஆனால் பாகிஸ்தான் பக்கம் சிறிது அனுதாபம் உள்ளது). எனவே தோராயமாக 3-5 நாடுகள் பாகிஸ்தானை தீவிரமாக அல்லது இராஜதந்திர ரீதியாக ஆதரிக்கலாம். நடுநிலையாக இருக்க வாய்ப்புள்ள நாடுகள்: ஐரோப்பிய ஒன்றியம் (பிரான்ஸ், இங்கிலாந்து தவிர, மற்ற நாடுகள் இந்தியா பக்கம் செல்லலாம்). ஆசிய நாடுகள் (இந்தோனேசியா, தாய்லாந்து போன்றவை நடுநிலையாக இருக்கலாம்). ஆப்பிரிக்க நாடுகள் தென் அமெரிக்க நாடுகள் (பிரேசில், அர்ஜென்டினா போன்றவை)
