இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐவருக்கு மரண தண்டனை

493609709_1001527985458236_556204081246282447_n.jpg

2012 ஆம் ஆண்டு முகத்துவாரம் பகுதியில் இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில், ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீண்ட நாட்கள் விசாரணை

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் தடிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.நீண்ட நாட்கள் விசாரணைக்குப் பிறகு சந்தேகநபர்கள் மீதான குற்றம் அரச தரப்பினரால் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

The current image has no alternative text. The file name is: 493609709_1001527985458236_556204081246282447_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *