பாகிஸ்தானை இந்தியா சீக்கிரமே தாக்க போகிறது.. படைகள் ரெடியாக உள்ளது.. பாக். பாதுகாப்பு அமைச்சர் உறுதி
�
பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவநத்திற்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும்
�
தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு
�
அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார். பாகிஸ்தான் மீது தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிராக Precision Strike முறையில் இந்தியா தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் வருகின்றன. அது என்ன “Precision Strike” இதில் என்ன மாதிரியான தாக்குதல்கள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேரடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்களை அறிவிக்க வாய்ப்புகள்
�
உள்ளன.நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம். பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்த வாய்ப்புகள் உள்ளன. சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என் கவுண்டர் செய்யலாம். அல்லது தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவித்து ஒட்டுமொத்தமாக ஜம்மு காஷ்மீர்
�
எல்லையில் தொடர் தாக்குதல்களை நடத்தி மொத்தமாக கேம்புகளை அழிக்கலாம். கடற்படையை பாகிஸ்தான் அருகே கொண்டு சென்று அங்கிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். அதேபோல் ஏவுகணை தாக்குதல், விமான தாக்குதல்களை நடத்த முடியும். Precision Strike: இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும். இப்படி
�
குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்.அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும் உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான்
�
செய்யப்படும். இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
