ரஷ்யா-உக்ரேன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே, போரை நிறுத்துவதற்காக டிரம்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ஜனாதிபதி பதினைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரேனுடன் எந்தவித நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என விட்காப்பிடம் ஜனாதிபதி புதின் கூறினார். இதனை பல முறை புதின் கூறியள்ளதாக தெரிவித்தார்.
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
