நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது.
�
இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.இதேவேளை, இன்றையதினம் இலங்கை உள்ளிட்ட உலகநாடுகளில் கத்தோலிக்க மக்கள் துக்கதினம் அனுஷ்டிப்பதுடன் பல ஆலயங்களில் இரங்கல் திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. வத்திக்கானில் இடம்பெறவுள்ள பாப்பரசரின் நல்லடக்க ஆராதனைகளில் வத்திக்கானின் உயர் நிலை அதிகாரிகள்
�
மற்றும் பாப்பரசரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் மாத்திரமே கலந்துகொள்ளவுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக மூடப்பட்டதையடுத்து, புனித பேதுரு பேராலயத்தின் உறுப்பினர்கள் பாப்பரசரின் திருவுடல் பேழைக்கு அருகில் இருந்து நல்லடக்கம் இடம்பெறும் வரை பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
