ஏழுமலையானுக்கே டஃப் கொடுக்கும் நம்ம பழனிமலையான் கொட்டிக் கிடந்த தங்கம்.. சிலிர்க்க வைத்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் முருகனை சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல்
�
காணிக்கையில் மொத்தமாக 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 088 ரூபாய் ரொக்கமும், 1131 கிராம் தங்கமும், 21,324 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள்.தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் இருக்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார் அந்த வகையில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ் பெற்றது. தமிழகம்
�
மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக தைப்பூசம் பழனி மலை கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கார்த்திகை மார்கழி மாதங்களில் விரதம் இருக்கும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசிப்பார்கள். இதேபோல பங்குனி உத்திரம் உள்ளிட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் பழனி மலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைகடலென திரளும். மேலும் வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பழனி மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
�
தொடர்ந்து திருவிழா நிறைவு பெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். முருகப் பெருமானுக்கு பக்தர்கள் அன்னதானம் வழங்குவதும் வழக்கம். மேலும் மலைக் கோவிலில் பல்வேறு பகுதிகளில் பெரிய சிறிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். மாதத்திற்கு ஒருமுறை அல்லது உண்டியல் நிரம்பியவுடன் உண்டியல்
�
காணிக்கையானது நடைபெறும். இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் உண்டியல்கள் நிரம்பியது. இதை அடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டது. பின்னர் பணம், நாணயம் ஆகியவற்றை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள்,
�
பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் இரண்டு நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 088
�
ரூபாயும், தங்கமாக 1131 கிராம், வெள்ளியாக 21,324 கிராம், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி 1610 நோட்டுகள் கிடைக்கப் பெற்றது. மேலும் பக்தர்கள் தங்கம் வெள்ளியிலான வேல், தாலிச் செயின், தங்கக்காசு, சாமி சிலைகள், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவ தானியங்கள், பட்டாடைகள், சேவல்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
