இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm (26-04-2024 சனிக்கிழமை

7_1655239001831_1655239007214.jpg

இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
(26-04-2024 சனிக்கிழமை

💐மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, கடின உடல் உழைப்பு இருக்கும் வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப தேவைக்குக்கேற்ப செயல்படுவது நல்லது. உறவினர்களால் விரைய சிலவுகள் உண்டாகும் உடல் நலம் சீராகும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்

💐மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
புதிய முயற்சிகள் கைகூடும். பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

💐கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

💐சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே,மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

💐கன்னி

கன்னி ராசி நண்பர்களே, எதையும் தாங்கும் மனவலிமைக் உண்டாகும். நினைத்த காரியம் நடக்கும்.வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.கடன் சுமைகள் குறையும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

💐துலாம்

துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்

💐விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறையும். மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

💐தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும்.திடீர் பணவரலாம் பிரச்சனைகள் தீரும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

💐மகரம்

மகர ராசி நண்பர்களே, மனம் அமைதி பெறும் .திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். புதிய வாகன யோகம் உண்டு தெய்வ வழிபாடு சிறக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் நலம் மேன்மை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருமானத்தை தரும்.

💐மீனம்

மீன ராசி நண்பர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். கோபத்தால் பிரியமானவர்கள் நட்பை இழக்க நேரிடும். உத்யோகத்தில் வளர்ச்சி இருக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

The current image has no alternative text. The file name is: 7_1655239001831_1655239007214.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *