ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் திங்கட்கிழமை (28) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்கு ரணிலுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரிதொரு தினத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருவதாக சட்டத்தரணிகள் ஊடாக தெரியப்படுத்தி இருந்தார்.
இந்நிலையிலேயே 28 ஆம் திகதி அவர் வாக்குமூலம் அளிப்பதற்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
