காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் க்திமிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத
�
கும்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள
�
இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தருவதற்காக பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை
�
பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவே தற்போது மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்.பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்,
�
பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியா தாக்கினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாங்கள் தற்காப்புக்காக தயார் நிலையிலேயே உள்ளோம். தக்க பதிலடி கொடுப்போம்” என்று பேசியுள்ளார். மேலும், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், இந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை
�
முன்வைக்குமாறு இந்தியாவுக்கு சவால் விடுத்தார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இஷாக் டார், “இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடியுள்ளது/ மேலும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரம் இருந்தால், தயவுசெய்து அதை எங்களுடனும் உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.
