பஹல்காமில் நடந்த 26 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடிகளை கொடுக்க தொடங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா துணிச்சலான, விரிவான பதிலடி நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்தியா எடுத்துள்ள ஏழு வலுவான மற்றும் விரைவான நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை செய்தியை
�
அனுப்பியுள்ளன. பயங்கரவாதத்தை பழிக்கு பழி வாங்குவோம்.. இந்தியர்களின் ஒவ்வொரு உயிருக்கும் பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது.பல வருடங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா பெரிய பதிலடியை கொடுக்காமல் விட்டு இருக்கிறது. வெறும் அறிக்கைகள், கண்டனங்களுடன் இந்தியா நிறுத்தி இருக்கிறது. ஆனால் இது பழைய இந்தியா இல்லை. புதிய இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிராக தீர்க்கமான, தைரியமான மற்றும் உறுதியான நடவடிக்கையை இந்தியா இந்தமுறை எடுத்துள்ளது.பிரதமர் நரேந்திர
�
மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) கூட்டத்தில் 7 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. (i) 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு
�
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.பாகிஸ்தான் – இந்தியா இடையிலான
�
ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியான அட்டாரி பார்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி முறையான ஒப்புதல்களுடன் சென்றவர்கள் 01 மே 2025 க்கு முன் அந்த வழியாக திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. (iii) சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் பாகிஸ்தானியர்கள் பலர் விசா பெற்று இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த நிலையில் இனி அப்படி அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்களும் ரத்து செய்யப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு
�
பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. (iv) டெல்லி உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள பாதுகாப்பு, இராணுவம், கடற்படை மற்றும் விமான படை ஆலோசகர்கள் “தனிநபர் அல்லாதவர்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். இதன் அர்த்தம், இத்தனை காலம் அவர்கள் தூதரக பணிகள் அடிப்படையில் இங்கே இருந்தனர். இனி அந்த அனுமதி அவர்களுக்கு கிடையாது. தனியாக இனி விசாவும் வழங்கப்படாது. இதனால் அவர்கள்உடனே வெளியேற வேண்டும். இதற்கு 1 வாரம் அதிகபட்சம் டைம் தரப்படும்.
�
அதேபோல் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் கமிஷனில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு / கடற்படை / விமானப் படை ஆலோசகர்களை திரும்பப் பெறுகிறது. அந்த பதவிகள் ரத்து செய்யப்பட்டதாகக் அறிவிக்கப்படுகிறது.பாகிஸ்தான் உயர் கமிஷனில் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த பலம் தற்போதுள்ள 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெளியேற்றம். மூன்று மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை வெளியேற்றி இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 45% குறைக்க வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டு உள்ளது. வாகாவில் நடக்கும் எல்லை கொண்டாட்ட நிகழ்வுகள் , தினசரி நிகழ்ச்சிகள் அடியோடு குறைக்கப்பட்டு உள்ளது.
�
இந்தியா இனி இது போன்ற அடையாள நட்பு சடங்குகளில் ஈடுபடாது என்று BSF உறுதிப்படுத்தியுள்ளது.இந்தியாவின் ராணுவ ஆற்றல் இந்தியா மேற்கண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மட்டுமின்றி ராணுவ நடவடிக்கைகள் மூலமும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் பெருமை மற்றும் ராணுவ பலத்தின் அடையாளமான ஐஎன்எஸ் விக்ராந்த் இப்போது அரபிக்கடலில் ரோந்து செல்கிறது. அதாவது பாகிஸ்தான் அருகே கடலில் ரோந்து செல்கிறது . மத்தியப் பகுதியில் நடைபெற்று வரும் அக்ரமன் ராணுவப் பயிற்சி என்று அழைக்கப்படும் The Akraman military exercise இந்திய எதற்கும் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. ஐஎன்எஸ்
�
சூரத்தில் இருந்து நிலப்பரப்பில் இருந்து வானத்தில் தாக்குதல்களை நடத்தும் Surface-to-Air Missile (MRSAM) சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு அதிர்சியை கொடுத்து உள்ளது. இப்படிப்பட்ட அடுத்தடுத்து ராணுவ ரீதியாக பாகிஸ்தானை இந்தியா திணறடிக்க தொடங்கி உள்ளது. கிரவுண்ட் ஆக்சன் அதோடு ராணுவம் நடத்திய என்கவுண்டரில் லஷ்கர் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரின் இல்லங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. உள்ளூரில் இருந்து கொண்டு
�
தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வந்த அடில் தோக்கர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அலி பாய் மற்றும் ஹஷிம் மூசா ஆகியோரின் ஓவியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் உறுதி இந்தியாவின் இந்த நடவடிக்கைகள், மோடியின் இந்த முடிவுகள் வியாபாரம் அல்ல. இது ஒரு புதிய இந்தியாவின் அதன் அரசியலின் தொடக்கமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இந்தியா துணிச்சலான, விரிவான பதிலடி நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.பயங்கரவாதத்தை பழிக்கு பழி வாங்குவோம்.. இந்தியர்களின் ஒவ்வொரு உயிருக்கும் பாகிஸ்தான் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற கடுமையான எச்சரிக்கையை இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளது.
