காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவித் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமெரிக்காவின்
�
சிஐஏ அமைப்பின் டாக்குமெண்ட் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த அப்பாவி மக்களின் மரணத்திற்கு இந்தியா தக்கப் பதிலடி தர வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தியா இந்த விவகாரத்தில் கடுமையான பதிலடி கொடுக்கும் என்றே
�
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அனைத்து ஆப்ஷன்களையும் வைத்து பதிலடி தரப்போவதாக இந்தியா ஏற்கனவே கூறிவிட்டது.சிஐஏ டாக்குமெண்ட் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. எல்லை தாண்டி வந்த தீவிரவாதிகள் தாக்குதலை ஒருங்கிணைத்து இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து
�
வருகிறது. இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து சிஐஏ 1993ல் தயார் செய்த டாக்குமெண்ட் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சிஐஏ அமைப்பு முதலில் இந்த டாக்குமெண்ட் ரகசியமாகவே வைத்திருந்தது. அந்நாட்டின் அதிபர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. மிகச் சமீபத்தில் தான் இந்த டாக்குமெண்டுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. பாகிஸ்தானுக்கு இந்தியா
�
பதிலடி கொடுக்கும் எனச் சொல்லப்படும் நிலையில். இந்த டாக்குமெண்ட் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.பாகிஸ்தானுக்கு பேரழிவு இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அது பாகிஸ்தானுக்குப் பேரழிவு என்று சிஐஏ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக அழிக்கும்.. ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் கூட ஆபத்து என அதில் கூறப்பட்டுள்ளது. 1993இல் தயாரிக்கப்பட்ட இந்த டாக்குமெண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளின் ராணுவ வலிமையைக் கணக்கில்
�
எடுத்துக்கொண்டு சிஐஏ தனது மதிப்பீடுகளை செய்துள்ளது. இரு நாடுகளும் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க 20% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தால் நிலைமை சீக்கிரம் மாறிவிடும் என அப்போதே சிஐஏ தனது டாக்குமெண்டில் எச்சரிக்கை விடுத்துள்ளது.பாகிஸ்தான் அரசே கவிழும் ஆபத்து “இந்தியா- பாகிஸ்தான்: 1990களில் போருக்கான வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இந்த டாக்குமெண்ட் தயாரிக்கப்பட்டது. அதில் போரைத் தொடங்க இந்தியாவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் போர்
�
ஏற்பட்டால் அது பாகிஸ்தானுக்குப் பேரழிவைத் தரும் என்றும் அந்நாட்டின் ராணுவம் அழியும்.. அல்லது அரசே மொத்தமாக வீழவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய போர்களிலும் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியையே தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிஐஏவின் இந்த டாக்குமெண்டில் அணு ஆயுதங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பார்க்கும்போது சந்தேகமே இல்லாமல் இந்தியா தான் வலிமையான நாடாக இருக்கிறது. இதனால் போர்
�
ஏற்படும்போது தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சமாளிக்கவும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.இந்திய ராணுவம் அதில் மேலும், “இந்திய ராணுவத்தின் விரைவான முன்னேற்றங்கள் பாகிஸ்தானின் திறனைக் குறைக்கும். இந்தியாவின் ராணுவம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவர்கள் பிரச்சினையைச் சமாளிக்க அணு ஆயுதங்களையே நம்பி இருக்கிறார்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையே பார்க்கும்போது இந்திய ராணுவமே வலிமையானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவல் பாதைகளை மூட இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எடுக்கும் என்றும் 1993ல் தயாரிக்கப்பட்ட அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
