சிந்து நதியில் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களுக்கே சொந்தம்! மீண்டும் மீண்டும் திமிராக பேசும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மீண்டும் பாகிஸ்தான் திமிராகப் பேசியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்
நடத்தினர். காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்தவர்களை நோக்கி யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒவ்வொருவரிடமும் மதத்தைக் கேட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.பஹல்காம் தாக்குதல் இந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்துள்ளதது. இந்தியாவின் இந்த அறிவிப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பாகிஸ்தான், நீரை வைத்து இந்தியா போரில் இறங்கியுள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், இந்தியாவின்
நடவடிக்கையைச் சட்டவிரோதமானது என்றும் சாடியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திலிருந்து இந்தியா ஒருதலைப்பட்சமாக வெளியேற முடியாது என்றும் கூறியுள்ளது. பாகிஸ்தான் திமிர் பேச்சு இது தொடர்பாக பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவீஸ் லெகாரி கூறுகையில், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா பொறுப்பற்ற முறையில் நிறுத்தி வைத்ததுள்ளது. இது போரைப் போன்ற ஒரு செயல்.. ஒரு கோழைத்தனமான, சட்டவிரோத நடவடிக்கை. சிந்து நதி நீரின் ஒவ்வொரு
சொட்டும் நம்முடையது.. எனவே, இந்தியாவின் இந்த முடிவை நாங்கள் முழு பலத்துடன் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம்” என்றார்.இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தானின் உயர்மட்டப் பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் குழு இன்று ஆலோசனை நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவீஸ் லெகாரி இந்தக் கருத்துகளைக் கூறியிருந்தார். அப்பாவி மக்கள் மீது தாக்குதல் கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும்
இடையே போர் நடந்துள்ளது. காஷ்மீரில் ராணுவத்தினர் மீதும் கூட தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், இந்த முறை எல்லாவற்றையும் தாண்டி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். நாட்டை உலுக்குவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் பிரான்ட் (TRF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்
பின்னணியில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் சிலர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.இந்தியா பதிலடி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகே இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்த தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது. மேலும், வாகா அட்டாரி நில எல்லையை மூடவும், சார்க் விசா திட்டத்தின் கீழ் விசா வழங்குவதை நிறுத்தியும் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி மேலும் கடுமையான நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்றே தெரிகிறது.
