3 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புமுனை.. முடிவுக்கு வரும் உக்ரைன் ரஷ்யா போர்?
ரஷ்ய அதிபர் புடினின் புதிய முடிவால், உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃபுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உக்ரைன் போரில் தங்களது நோக்கங்களை குறைத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாற்றம் மூன்று ஆண்டுகளாக நீடித்த
போரில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
�
�
உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து தங்களது உரிமைகளை விலக்கிக்கொள்ள ரஷ்யா தயார் என்று புதின் அறிவித்துள்ளார். மேலும், கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்கவும், டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டை ஒப்புக்கொள்ளவும் ரஷ்ய அதிபர் புடின் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்யா போர்?
அமெரிக்காவின் அமைதி திட்டமானது ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு
�
உக்ரைன் இன்னும் பதில் அளிக்கவில்லை. ஆனால், உக்ரைன் அதிபர் வோலோடிமிர்
ஜெலன்ஸ்கி, கிரீமியாவை ரஷ்யாவின் பகுதியாக அங்கீகரிப்பதை கடுமையாக நிராகரித்துள்ளார். கிரீமியா உக்ரைனின் பகுதியாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ரஷ்யா – அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தைகள் உலகளாவிய
அமைதி முயற்சியில் முக்கியமாக கட்டமாகக் கருதப்படுகின்றன. எனினும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான நிலையான சமாதானம் எப்போது ஏற்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. புடினின் புதிய முன்மொழிவு ஏற்று கொள்ளப்பட்டால் போர் முடிவுக்கு வந்து, உலக அரசியல்
மற்றும் பொருளாதாரத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
