தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனஅதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும், விரைவில் நாடு திரும்ப வேண்டுமென கூறியுள்ளது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களையும் நாளைக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
சிகிச்சைக்காக பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவில் வந்து சிகிச்சை பெற்று வருவோர், அவர்களுடன் தங்கி இருப்பவர்கள், ஆட்டோமொபைல் தொழில் சார்ந்தவர்கள், என்ற வகையில் சுமார் 500 பேர் வரை தமிழகத்துக்கு வந்து செல்வதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இவர்களை நாளைக்குள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சிகிச்சையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
