சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்

492449366_997468615864173_6899076424437091672_n.jpg

காஷ்மீர் தாக்குதல்|பாதியில் நாடு திரும்பிய பிரதமர் முதல் கண்டனம் தெரிவிக்கும் உலக தலைவர்கள் வரை!

பாதியில் நாடு திரும்பிய பிரதமர் முதல் கண்டனம் தெரிவிக்கும் உலக தலைவர்கள் வரை உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் நேற்றைய தினம் (22.4.2025) தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குலின் பின்னணியில் இருப்பவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா

சென்றிருந்த பிரதமர் மோடி,காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இன்று அவசரமாக நாடு திரும்புகிறார். இந்நிலையில், இன்று பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர கூட்டமும் நடைபெற உள்ளது. மேலும், இதுகுறித்து கண்டனத்தை பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, “ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது குறித்து அரசு தரப்பில் உறுதி செய்யப்படும். அண்மைய ஆண்டுகளில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது” என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் ,இந்தியா தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை இக்கொடூரத்தாக்குதலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் முற்றிலும் மோசமானது. இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.இந்த கொடூரமான தாக்குதலை நடத்தியவர்களை யாராலும்

காப்பாற்ற முடியாது. குற்றவாளிகள் அதற்கான விளைவுகளை கண்டிப்பாக எதிர்கொள்வார்கள் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக உள்ளது.சுற்றுலா பயணிகள் மீதான கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த மனவலியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் இணைந்திருக்கிறது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக பொய்யான கூற்றுகளை கூறுவதற்கு பதிலாக, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடும்

நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலைஒ செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்லனர். விலை மதிப்பற்ற உயிர்களை காவு கொண்டஅதிர்ச்சிக்குள்ளாக்கும் தாக்குதல் சம்பவம் இது. இந்த தாக்குதலில்

பாதிக்கப்பட்டவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளிக்கிறோம்.”

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்

The current image has no alternative text. The file name is: 492449366_997468615864173_6899076424437091672_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *