இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
22-04-2025. செவ்வாய்க்கிழமை. துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது
💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். எதிர்பார்ப்புகள் தானாக பூர்த்தியாகும். நெருக்கமான நண்பர்கள் உதவியாக இருப்பர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தெரிந்தவர்களுக்கு உதவி செய்ய நேரிடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்ப விவகாரத்தில் கவனம் தேவை. எதிரிகள் விலகி நிற்பர். அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
💐கடகம்
கடக ராசி நேயர்களே, உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும். முக்கிய வேலைகளை தாமதின்றி செய்ய முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். மனதில் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். விரோதிகளும் கூட நண்பர்களாக மாறுவர். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும்.
💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப நலம் மேலோங்கும். எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசவும். கடன் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்துடன் இன்றைய பொழுது இனிமையாக கழியும். மன இறுக்கம் வந்து நீங்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
💐மகரம்
மகர ராசி நேயர்களே, பகைவர்களால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். பெரியோர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவர். வழக்கில் நல்ல ஒரு திருப்பம் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் குழப்ப நிலையை தவிர்க்கவும். எதிர்பாராத ஒரு காரியம் முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
💐மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் பெருகும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறை கற்றுக்கொள்ள முடியும்.
