பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் இன்று காலமான நிலையில் 15 நாட்களில் புதிய போப் தெரிவு செய்யப்படுவார் என கூறப்படுகின்றது.
பொதுவாக போப் ஆண்டவர் ஒருவர் இறந்தாலோ, புதிய போப் ஆண்டவர் நியமிக்கப்பட இருந்தாலோ ரகசிய தேர்தல் செயல்முறை நடத்தப்படும் என கூறப்படுகிறது.புதியவர் வரவை அறிவிக்கும் வெள்ளை புகை
அதாவது போப் ஆண்டவர் பதவி காலியானது முதல் 15-20 நாட்களுக்குள், 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து, வாரிசைத் தீர்மானிப்பதற்கான ரகசியத் தேர்தல் செயல்முறையான போப்பாண்டவர் மாநாட்டில் பங்கேற்பார்கள்.70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட கார்டினல்கள் உள்ளனர், ஆனால் சுமார் 120 பேர் மட்டுமே கார்டினல் வாக்காளர்கள்.
