இன்றைய_ராசிபலன்கள். Pothikai.fm
21-04-2025 திங்கட்க்கிழமை
💐மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முடியும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். யாரை நம்புவது என்ற மனக்குழப்பம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
💐ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். நெருக்கமானவர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்படும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
💐மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, உற்சாகமாக காணப்படுவீர்கள்.தெய்வ அனுகூலத்தால் நினைத்தது நடக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.
💐கடகம்
கடக ராசி நண்பர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெறும். முன் கோபத்தை தவிற்க்கவும்.பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
💐சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி வரும்.நினைத்த காரியம் நடக்கும். மருத்துவ செலவுகள் கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
💐கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி ஏற்படும். சொத்து விவகாரத்தில் இழுபறி இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
💐துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.உறவினர்கள் உதவி கேட்டு வருவர். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம்.மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
💐விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் அடங்கும். தேவையின்றி கடன் வாங்குவதை தவிற்க்கவும்.
தொழில், வியாபாரத்தில் பெரியளவில் மாற்றம் வரும்.
💐தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பாரம் கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற விவாதங்கள் தவிற்ப்பது நலம்.கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
💐மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
💐கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். உறவினர்கள் வழியில் சில நெருக்கடிகள் வரும். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை.கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்
💐மீனம்
மீன ராசி நண்பர்களே,குடும்ப உறவு முறைக்குள் இருந்துவந்த பகைகள் அகலும் குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கடன் சுமை இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
