டிரம்பிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

492519073_995451712732530_6285707100201427380_n.jpg

President Donald Trump speaks to Associated Press Chief White House Correspondent Julie Pace in the Oval Office in Washington, Wednesday, April 19, 2017. (AP Photo/Andrew Harnik)

அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல், வரி உயர்வு, பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தம், காசா, உக்ரைன்போரில் அமெரிக்க நிலை, அரசு ஊழியர்கள் பணி நீக்கம் என கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார் டிரம்ப்.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அரசு ஊழியர்கள் சுமார் 2,00,000 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற முடிவுகளுக்கு அமெரிக்க மக்கள் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்க போராட்டத்தை துவக்கி உள்ளதாகவும், மீண்டும் ஒரு சுதந்திர புரட்சியை உருவாக்குவோம் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

நேற்று சனிக்கிழமை முதல் துவங்கிய போராட்டம் 50 மாகாணங்களில் 400 க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பலரும் டிரம்ப்பிற்கு எதிராக பதாகைகள் ஏந்தி போராரடி வருகின்றனர்.

The current image has no alternative text. The file name is: 492519073_995451712732530_6285707100201427380_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *