Pothikai.fm 15-04-2025( செவ்வாய்க்கிழமை

download-3-7.jpg

Pothikai.fm
15-04-2025( செவ்வாய்க்கிழமை

💐மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.

💐ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வரவு, செலவு கணக்கில் கவனமாக இருக்கவும்.முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிற்க்கவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

💐மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, மனக் கவலை அகலும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும். மனக்குழப்பம் அதிகமாக காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்.

💐கடகம்

கடக ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். பண தேவைகள் பூர்த்தியாகும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

💐சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும்.காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் கைகூடும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

💐கன்னி

கன்னி ராசி நண்பர்களே,மனநிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.சோம்பல் விலகும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐துலாம்

துலாம் ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். நண தேவைகள் பூர்த்தியாகும்.வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

💐விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.உடல் நலனில் அக்கறை கொள்ளவும். நல்லதையும் கெட்டதையும் சமமாக பாவித்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

💐தனுசு

தனுசு ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

💐மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

💐கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள்.உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐மீனம்

மீன ராசி நண்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு வரும்.அரசியல் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் .வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *