நேற்றைய தினம் சந்திப்பு புத்தாண்டில் ஒன்றுகூடிய ராஜபக்க்ஷர்கள்

25-67fe0d72b0d52.png

இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளான ராஜபக்ச சகோதரர்கள் நேற்றையதினம் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தையொட்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக மனைவியுடன் சென்றுள்ளார்.மஹிந்தவின் பதிவு

இந்த சந்திப்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். மஹிந்தவின் பதிவில்,எனது சகோதரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ச ஆகியோர் எனது உத்தியோகபூர்வ இல்லத்தில் என்னைச் சந்திக்க வந்தனர் நாங்கள்

மிகவும் அன்பான உரையாடலை மேற்கொண்டோம். புத்தாண்டு தினத்தன்று அவர்கள் கைகளில் வெற்றிலையுடன் வருவதைப் பார்த்தபோது, ​​பக்மாவில் உறவினர்களை பார்க்க செல்லும் சம்பிரதாயமே எனக்கு நினைவுக்கு வந்தது.அவர்கள் இருவருக்கும் வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் பல நண்பர்களும் கலந்து கொண்டனர், அவர்களுக்கு வளமான மற்றும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *