ஈரானுக்கு ஐடியா தரும் ரஷ்யா புதினின் அதிரடியால் அலறும் அமெரிக்கா

download-12-1.jpg

டிரம்ப் மிரட்டலுக்கு நடுவே.. ஈரானுக்கு ஐடியா தரும் ரஷ்யா! புதினின் அதிரடியால் அலறும் அமெரிக்கா

அமெரிக்கா ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை என்பது வரும் 19ம் தேதி ரோமில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கிடையே தான் ஈரான் குழுவினர் அவசரமாக உதவி கேட்டு

ரஷ்யாவுக்கு விரைய உள்ளனர். இந்த பயணம் ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகால பிரச்சனை உள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும் ஏற்கனவே அமெரிக்காவுடனான மோதல் காரணமாக வடகொரியா அணுஆயுதம் தயாரித்து மிரட்டி வருகிறது. இதனால் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு என்பது அமெரிக்கா மட்டுமின்றி அண்டை நாடாக உள்ள இஸ்ரேல் உள்பட மத்திய கிழக்கில்

உள்ள பிற அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று டிரம்ப் நினைக்கிறார்.இதனால் அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். முதலில் அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்தது. அதன்பிறகு ஓமனில் வைத்து அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப்

மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மத்தியஸ்தம் செய்தார். இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.அதோடு இந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 19ம் தேதி 2வது கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி

தலைநகர் ரோமில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன், ஈரான் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார்.இந்நிலையில் தான் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஈரான் நாட்டின் பிரதிநிதிகள் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச உள்ளனர். ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி உள்ளிட்ட சில முக்கிய பிரதிநிதிகள் ரஷ்யா வெளியுறவுத்துறை

அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச உள்ளனர். இதனை ஈரான் உறுதி செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதாவது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கூறிய கருத்து, 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் எப்படி கையாள வேண்டும். அமெரிக்காவிடம் இருந்து எந்த வகையான சலுகைகளை பெற வேண்டும் என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது

அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தையை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி ஈரானுக்கு, ரஷ்யா ஐடியா கொடுக்கிறது. இது ரஷ்யா, ஈரான் மீது அமெரிக்காவை கோபப்படுத்தி உள்ளது.முன்னதாக ஈரானை பொறுத்தவரை ரஷ்யா, சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுடன் நல்ல நட்பில் உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு

நிலைப்பாட்டில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் அணுஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியம் தேவைப்படும். இந்த யுரேனியத்தின் தூய்மை தன்மை என்பது 90 சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது ஈரான் 60 சதவீத தூய்மையான யுரேனியத்தை வைத்துள்ளது. இதனை இன்னும் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பம், வழிமுறைகளை ரஷ்யா தான் ஈரானுக்கு வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் ரஷ்ய பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *