அமெரிக்காவின் போயிங் விமானங்கள் வாங்க தடை அடுத்த ஆட்டத்தை தொடங்கியது சீனா

download-11-1.jpg

அமெரிக்காவின் போயிங் விமானங்கள் வாங்க தடை.. அடுத்த ஆட்டத்தை தொடங்கியது சீனா

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக மோதல் வலுத்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை டெலிவரி எடுக்க கூடாது என சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ப்ளூம்பெர்க் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரியை விதித்து இருக்கிறார். இதற்கு

போட்டியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 125 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.நாள்தோறும் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில் சீன அரசு சீனாவில் செயல்படக்கூடிய விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் விமானங்களை வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. சீனாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் 3 சதவீதம் சரிவை கண்டிருக்கின்றன. இது தவிர அமெரிக்காவை

சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து விமானங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதையும் சீன நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு ஆணையிட்டுள்ளது. சீன அரசின் இந்த உத்தரவால் சீனாவில் செயல்படக்கூடிய விமான சேவை நிறுவனங்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன. ஏனெனில் அமெரிக்காவிடமிருந்து விமான உபகரணங்கள் மற்றும் விமானங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சீனாவில் தங்களுடைய விமானங்களை மெயின்டனன்ஸ் செய்வதற்கு இந்த நிறுவனங்கள் அதிக தொகையை செலவிட

வேண்டி இருக்கும். இந்த நிலையில் சீன அரசு அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.சீன அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீத வரியை விதித்திருக்கிறது. எனவே சீன விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து விமானங்களை இறக்குமதி செய்தால் அதன் விலையை விட 125 சதவீத தொகையை வரியாக மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் .இது சீனாவில் விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். எனவே சீன நிறுவனங்கள்

ஏர் பஸ் மற்றும் சீனாவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான கோமாக் உள்ளிட்டவற்றிடம் இருந்து விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சீனாவில் செயல்படக்கூடிய ஏர் சைனா, போயிங் நிறுவனத்திடம் 45 விமானங்களையும், ஈஸ்டர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 53 விமானங்களையும், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 81 போயிங் விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவை டெலிவரி பெற இருந்தன. இந்த சூழலில் தான் சீன அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *