மேஷ ராசிக்கு இனி ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.. வெற்றி மேல் வெற்றி ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி

download-13-1.jpg

மேஷ ராசிக்கு எல்லா பிரச்சனையும் ஓவர்.. இனி ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.. வெற்றி மேல் வெற்றி ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.ராகு கேது என்பது நிழல் கிரகம்,

சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து

ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மேஷம் மேஷம் ராசியினருக்கு 11 இல் ராகு, 5 இல் கேது இருக்கிறார். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ரொம்ப ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல. பிள்ளைகளை அரவணைத்துச் செல்வது நல்லது. அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைக் கேட்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளையார் பட்டிக்குச் சென்று வழிபடுவது நல்லது. அங்கு குங்குமம், திருநீறு வைத்து வழிபட்டு அதனை தினந்தோறும்

பயன்படுத்துவது நன்மையைத் தரும்.வெற்றி மேல் வெற்றி ராகு கேது பெயர்ச்சியில் அற்புதமான அமைப்பு உண்டாகும். லாபங்கள் உண்டாகும். முதலீடுகள் கிடைக்கும். மன அழுத்தம் தீரும். எல்லாவற்றிலும் ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். துணையின் மனக்குறைகள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தாருடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி குடும்பத்தில் உறவினர், நண்பர்கள் வருகை உண்டாகும். ஆனந்தம் ஏற்படும். வெளியுலகத்தில்

காணப்பட்ட சங்கடங்கள், குழப்பங்கள், பலவிதமான பகைகள் எல்லாம் தீரும். அந்நியோன்யம் அதிகரிக்கும். வேற்று மொழி மனிதர்களால் பெரிய அளவிலான ஆதாயம் கிடைக்கும். கடல் கடந்து தொழில் ஆரம்பிக்கும் அமைப்பு ஏற்படும். தொழில் தொடங்கும் யோகம் கடல் கடந்து உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள்களாக இருந்து வந்த மனக் கஷ்டங்கள் தீரும். தாய்நாட்டிற்கு திரும்ப முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது

நல்லது. தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். முதலீடுகள், சேமிப்புகளைச் செய்வது நல்லது. இதுவரை இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும். தொட்ட காரியங்களில் ஜெயிப்பதற்கான மன தைரியம் பிறக்கும். கார் வாங்கும் யோகம் குடும்பத்தில் இருக்கக்கூடிய மாற்றுக் கருத்துகள் எல்லாம் சரியாகி ஒன்று சேரும் யோகம் உண்டாகும். தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, உத்தியோக வளர்ச்சி, பதவி உயர்வு உண்டாகும். புதிய கார் வாங்கும் யோகம் உண்டாகும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும் ஆண்டாக அமையும்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *