தொடரும் வர்த்தகப் போர் | 104% வரிவிதித்த அமெரிக்கா.. இந்தியாவுக்கு சீனா அழைப்பு!
அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி
�
வந்தார். இதையடுத்து சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் அதிக வரிவிதிப்பையும் மேற்கொண்டார். மேலும், பிற நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதத்தில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (பரஸ்பர) வரி விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். அதில், பிற நாடுகள் தங்கள் பொருள்கள் மீது விதிக்கும் வரி விகிதத்தை சற்றே குறைத்து, ‘தள்ளுபடி’ வரி விகிதங்களை ட்ரம்ப் வெளியிட்டாா். அந்த
�
வகையில் சீனாவுக்கு 34 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதேநேரத்தில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவும் பதிலுக்கு வரி விதித்தது.இதன்மூலம், உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கிடையே, ”தங்களுக்கு விதித்த பதில் வரியை சீனா திரும்பப்பெறாவிட்டால் அதற்கு கூடுதலாக 50% வரி விதிக்கப்படும்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்ததுடன், ஒருநாள் கெடுவும்
�
விதித்திருந்தார். இதற்கு சீனா வர்த்தக அமைச்சகம், “”இது வெறும் மிரட்டல். அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்” எனப் பதிலளித்திருந்தது.இந்தச் சூழலில், அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விதிக்கப்பட்ட தற்போதைய வரிகளைக் கணக்கிட்டால், ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சீனப் பொருட்களுக்கான ஒட்டுமொத்த வரி அதிகரிப்பு 104 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பைத் தொடர்ந்து சீனா இந்தியாவுக்கு
�
அழைப்பு விடுத்துள்ளது.சீனா-இந்தியா பொருளாதார மற்றும் வர்த்தக உறவு பரஸ்பர நன்மைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அமெரிக்காவின் வரிகளை துஷ்பிரயேகம் செய்வதை எதிர்கொள்வதாகும். குறிப்பாக ட்ரம்பின் வரிவிதிப்பு, உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமையைப் பறிக்கிறது. ஆகையால், மிகப்பெரிய வளரும் நாடுகள் (அப்பகுதியில்) ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.. வர்த்தகம் மற்றும் வரி விதிப்புப் போர்களில் வெற்றியாளர்கள் இல்லை.
�
அனைத்து நாடுகளும் விரிவான ஆலோசனையின் கொள்கையை நிலைநிறுத்த வேண்டும், உண்மையான பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அனைத்து வகையான ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தையும் கூட்டாக எதிர்க்க வேண்டும்” என டெல்லியில் உள்ள தூதரகத்தின் சீன செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்துள்ளார்.
