90 நாட்களுக்கு வரி விதிப்பை நிறுத்த ட்ரம்ப் முடிவு?.. வெளியான தகவலால் சட்டென உயர்ந்த பங்குச்சந்தை!
இந்நிலையில் வரி விதிப்பு முடிவை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைக்க ட்ரம்ப் பரிசீலிப்பதாக வெளியான தகவல்களால் பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்து வேகமாக உயர்ந்தன.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு உலக பங்குச்சந்தைகளில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் வரி விதிப்பு முடிவை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைக்க ட்ரம்ப் பரிசீலிப்பதாக வெளியான தகவல்களால் பங்குச்சந்தைகள் உற்சாகமடைந்து வேகமாக உயர்ந்தன.இதனால் இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களும் பெரும் ஆறுதல் அடைந்தனர். ஆனால் இது சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. இத்தகவல் வதந்தி என வெள்ளை மாளிகை அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் மீண்டும் கிடுகிடுவென வீழ்ச்சி கண்டன
