பாம்பனில் நடக்கும் பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் உதகை: உதகையில் நடக்கும் விழாவில் பங்கேற்றுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்
