பாம்பன் பாலத்தை கட்டியவரும் குஜராத்தி.. இன்று இந்த பாலத்தை திறந்து வைத்ததும் குஜராத்தி: பிரதமர் மோடி இந்த பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர் ஒரு குஜராத்தி. தற்போது இதே பாம்பனில் இந்த புதிய பாலத்தை திறந்து வைப்பதும் அதே குஜராத்தில் பிறந்த நான்” எனக் கூறி உள்ளார் பிரதமர் மோடி.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த
�
பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.535 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.பின்னர் அங்கிருந்து பேருந்து நிலையம் அருகே ஆலயம் பகுதியில் ரயில்வே துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் 8,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திற்கான பல்வேறு நெடுஞ்சாலை துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவடைந்த பணிகளை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார். பிரதமர் மோடி பேச்சு அதைத்தொடர்ந்து பேசிய
�
பிரதமர் மோடி, “ராமேஸ்வரம் பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த பூமியாகும். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதற்கு அப்துல் கலாம் வாழ்க்கை ஒரு உதாரணம். தமிழகத்தின் சங்க இலக்கியத்திலும் ராமரை பற்றி கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சுவாமி கோவிலில் தரிசனம் செய்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். பல லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் இந்த பாலம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பம் பாரம்பரியத்தை உள்ளடக்கியது. ராமேஸ்வரம் தொடங்கி சென்னை
�
வரை நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பினை இந்த புதிய ரயில் சேவை மேம்படுத்தும். தமிழ்நாட்டின் சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு இது ஆதாயங்களை கொடுக்கும். இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை இது ஏற்படுத்தித் தரும். ரயில்வே நிதி கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இருமடங்காக உயர்ந்துள்ளது. நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளே காரணம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே திட்டங்களுக்கு 900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 10
�
ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கான நிதி 6,000 கோடியாக ஒதுக்கப்பட்டு ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நான்காயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது.சுமார் 8000 கோடியிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு 700 கோடி லாபம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவக்
�
கல்லூரிகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.” எனப் பேசினார். குஜராத்தி மேலும் பேசிய பிரதமர் மோடி, “இன்று மிகவும் புனிதமான நன்னாள். ஒரு ஆச்சர்யமான தற்செயல் நிகழ்வு. இந்த பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர் ஒரு குஜராத்தி. தற்போது இதே பாம்பனில் இந்த புதிய பாலத்தை திறந்து வைப்பதும் அதே குஜராத்தில் பிறந்த நான்.இந்த புனித ராமேஸ்வரம் பூமியில் இந்த ராம நவமி நன்னாளில் என் மனதில் ஒரு உணர்ச்சி வசப்பட்ட சூழல் நிலவுகிறது. இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளும் கூட. சக்தி படைத்த தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற லட்சியத்தை தாண்டி நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்” எனக் கூறினார் பிரதமர் மோடி.
