உலகம் முதல் உள்ளூர் வரையிலான இன்றைய (06.04.2025) செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள்.மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று பிற்பகல்
�
3.40 மணியளவில் மண்டபம் உச்சிப்புளி ராணுவ தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம்புறப்பட்டு மாலை 4 மணி அளவில் மதுரை விமான நிலையம் வருகிறார். தொடர்ந்து மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
�
பிரதமர் மதுரை விமான நிலையம் வருகை தர உள்ளதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் மதுரை மாநகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்கள் மற்றும் பயணிகள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விமான நிலையத்திற்கு வந்த அரசு பேருந்திலும் போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர், அமைச்சர்
�
பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோரும், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.பாஜக கூட்டணிக்கு செல்லும் முன், நீட் தேர்வு விலக்கு தந்தால்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?” என உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் தமிழ்நாட்டு மக்களின் அச்சத்தை
�
பிரதமர் போக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டு மக்களின் அச்சத்தை பிரதமர் மோடி போக்க வேண்டும்” தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான ஒரு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு கூடலூரில் கலைஞர் நகர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
�
நீலகிரியில் வீடில்லாதவர்களுக்கு ரூ.26 கோடியில் கூடலூரில் கலைஞர் நகர் உருவாக்கப்படும்” என நீலகிரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
நவீன தொழில்நுட்ப புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் மண்டபத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.
