பாகிஸ்தானில் உள்ள அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் பாகிஸ்தானின் அணுசக்தி மையங்கள் மீது இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் மொத்தம் 9 நாடுகளிடம் மாத்திரமே அணுஆயுதம் உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, வடகொரியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது.
இவற்றில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான மோதல் காரணமாக இப்போது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஈரானின் இந்த திட்டத்தை முடக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அணுசக்தி திட்டம் என்ற பெயரில் ஈரான் அணுஆயுதம் தயாரிக்காமல் தடுக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு இன்னும் ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்த நாடு மீது இதுவரை இல்லாத அளவுக்கு வெடிகுண்டுகள் வீசப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இப்படியான சூழலில் தான் தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை உள்ளது. இப்படியான சூழலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளனர்.பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை எவராலும் தடுக்க முடியாது. அணுகுண்டுகளை அழிக்க வாய்ப்பில்லை. மீறி எங்களை சீண்டினால் உலகில் உள்ள எந்த நாடுகளுக்கும் உரிய பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஏவுகணைகள் உட்பட பிற அணுஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது” என்றார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருப்பதை விரும்பவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது today tamil
