அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார் மோடி

489427219_984656550478713_1703016046116805625_n.jpg

இந்தியப் பிரதமர் மோடி இன்று அநுராதபுரத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர , இன்று (06) அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் பரிசாக நிறுவப்பட்ட மஹாவ – அநுராதபுரம் தொலைபேசி சமிஞ்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட மஹாவ-ஓமந்தை ரயில் மார்க்கமும் இன்று காலை திறக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரம் விஜயத்தை முன்னிட்டு இன்று அனுராதபுரம் நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் விமானப்படை தளத்திலிருந்து ஸ்ரீ மகா போதி, வைத்தியசாலை சுற்றுவட்டம், ஹரிச்சந்திர மாவத்தை, மாகாண சபை சுற்றுவட்டம், மணிக்கூண்டு சுற்றுவட்டம் மற்றும் குருநாகல் சந்திப்பு வரையிலான வீதிகள் காலை 8.30 மணி முதல் மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ மகா போதிக்கு அருகிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வீதிகள் மற்றும் அனுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து விமானப்படை தளத்திற்குச் செல்லும் வீதிகள் இன்று காலை 11 மணி வரை அவ்வப்போது மூடப்படவுள்ளன.

இந்த வீதிகள் மூடப்படும் போது, ​​மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *