வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம் – பிரபு எம்.பி
நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பெட்ரோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, அனைத்து தட்டுப்பாடுகளுடன் வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம்.
என மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியிலுள்ள இலங்கை போக்குவரத்து சாலைக் புதன்கிழமை(26.03.2025) மாலை விஜயம் செய்திருந்த அவர் அங்கிருந்த உத்தியோகஸ்த்தர்களிடையே கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இலங்கையை போக்குவரத்து சபைக்குரிய ஆளணிப்பற்றாக்குறை மற்றும் ஏனைய இதர குறைபாடுகளை எதிர்காலத்தில் எமது அரசாங்கத்தின் மூலம் நிவர்த்தி செய்து தரப்படும்.
பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மாவட்ட அமைத்து குழு கூட்டத்திலும் போக்குவரத்து விடயங்கள் தொடர்பில் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றன குறிப்பாக பட்டிருப்பு தொகுதியில் அமைந்திருக்கின்ற கருவாஞ்சிகுடி பிரதேசம் போரதீவுப்பற்றுப் பிரதேசம் பட்டிப்பளைப் பிரதேசம், போன்றவற்றின் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றன.
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தட்டுப்பாடு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் தட்டுப்பாடு, குறிப்பாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வீதிகளில் காணப்படுகின்ற புனரமைப்பு வேலைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். உடனடியாக எதனையும் செய்துதர முடியாது. அதனை கட்டம் கட்டமாக நாங்கள் நிவர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றோம்.
நமது நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றோம். பெட்ரோல் தட்டுப்பாடு, டீசல் தட்டுப்பாடு, அனைத்து தட்டுப்பாடுகளுடன் வரிசைகளுடன் நின்ற நாட்டை நாங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த மார்ச் 21 ஆம் திகதி வரையில் மூன்று மாத காலங்கள்தான் ஆகின்றன. இந்த குறுகிய காலத்தில் முடிந்த அளவு எங்களாலான செயற்பாடுகள் முன்னிறுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவிற்கு நாங்கள் முன்னகர்த்தி இருக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் அனைத்து துறைகளிலும் காணப்படுகின்ற குறைபாடுகளை படிப்படியாக நிவர்த்தி செய்து சிறந்ததொரு நாட்டை நாங்கள் கட்டி எழுப்ப வேண்டும் என்பதுதான் எமதும் எமது ஜனாதிபதியின் கொள்கையும்கூட.
வாக்குறுதிகள் வழங்கினால் அந்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் குறுகிய காலத்தில் எந்த விடையங்களை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் அடுத்து வரும் காலப் பகுதிகளில் எமது சேவைகளில் அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்வதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.
அங்கவீனமுற்றவர்கள் போக்குவரத்து பேருந்துகளில் ஏறிச் செல்வதற்குரிய வசதி வாய்ப்புகள் தற்போது வரை இல்லாமல் உள்ளது. அவர்களும் பயணிக்க கூடியதாக எமது சேவைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். இதுமாற்றம் பெறவேண்டும். பெண்களுக்கான தனியான பேருந்து சேவைகள் இல்லை மற்றும காட்டு யானை தாக்கம் இடம்பெறும் பிரதேசங்கள் அதிகம் உள்ளன அவ்வாறான மக்களையும் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கக்கூடிய விதமாக நேர அட்டவணைகளை மாற்றி அமைத்து புதிய பேருந்துகளை கொண்டு வந்து சேவையில் ஈடுபடுவது கூடிய திட்டங்களை முன்நகர்த்த வேண்டும் இவ்வாறு அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவுடன், இந்த போக்குவரத்து சேவைகளை முன்னகர்த்த வேண்டியுள்ளது.
எனது அரசாங்கத்தின் கீழ் திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாங்கள் பரிசீலனை செய்து வருகின்றோம். மக்களுக்கு வழங்குகின்ற சேவைகளை மென்மேலும் எவ்வாறு மேம்படுத்தி மக்களுக்கு நவீனமயப்படுத்தலுடன் சேவைகளை எவ்வாறு வழங்கலாம் என அமைச்சரவையும் கலந்துரையாடி வருகின்றது. சேவைகளை மக்கள் காலடிக்கு எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்பது தொடர்பிலும் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் கடந்த பாராளுமன்ற குழு விவாதத்திலும்கூட நாங்கள் இந்த போக்குவரத்து சேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
