டிரம்ப் உத்தரவு – 1300 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

download-4-29.jpeg

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவு – 1300 ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (Voice of America) செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இதன் சேவைகளைப் பெறுவதாக அந்நிறுவனம் கூறுகிறது.

வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ராமோவிட்ஸ் பேசுகையில், அவர் உட்பட அந்நிறுவனத்தின் 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *