சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன.

file_623459d80d611.jpg

15 ஏக்கர் வேளாண்மையை சேதப்படுத்திய காட்டு யானைகள்! அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன.

நேற்று (12) புதன்கிழமை காலை முதல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் உள்ள வயல் வெளிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் மேய்ந்து கொண்டிருப்பதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்களுக்கு மத்தியில் மிகுந்த செலவுடன் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை காட்டு யானைகள் அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியதென விவசாயிகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பயிர்களுக்கு நாசம் செய்து கொண்டிருக்கின்ற யானைகளை விரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

மேலும், காட்டு யானைகளினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *