கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி

download-13-3.jpeg

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார்.

அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளையும் பெற்றனர்.

இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *