ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்

482253200_964517562492612_6512293597111584247_n.jpg

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி – தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் – ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம் கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (10) ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு, வீடு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உடனடி மற்றும் நிரந்தர உதவிகளை கோரியே அவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி, ஆனால் தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம், எங்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற அரசு ஆதரவு தேவை உட்பட தங்கள் துயரங்களை தெரிவிக்கும் பல்வேறு பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

உயிர்வாழ்வுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தீர்வுகளை அரசும், சர்வதேச சமூகமும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் என சொல்லப்படும் அகதிகள் 115 பேர், இலங்கையின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் வந்து தரையிறங்கி, இலங்கையில் தஞ்சமடைந்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *