வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

download-7-5.jpeg

யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குறித்த வயோதிப பெண் , கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவி தொகை பெறுவதற்காக கடந்த 17ஆம் திகதி சென்று , நடந்து வீடு திரும்பி கொண்டிருந்த வேளை பெண்ணொருவர் வயோதிப பெண்ணுக்கு உதவும் முகமாக அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.அவ் வேளை , இருபாலை சந்திக்கு அண்மித்த பகுதியில் , பின் இருக்கையில் இருந்த வயோதிப பெண் தவறி வீதியில் விழுந்துள்ளார்.

இதில் காயமடைந்தவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்றைய தினம்(4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *