தேசபந்து தென்னகோன், நாளை நீதிமன்றத்தில் சரணடைவார்

download-19.jpeg

தற்போது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (06) தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், நேற்று முன்தினம் (03) மாத்தறை, கொட்டவிலவில் உள்ள தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைவார் என்று எதிர்பார்த்து செய்தி சேகரிக்க காலை முதல் நீதிமன்றத்தின் முன்னாலுள்ள பிரதான வாயிலில் ஊடகவிலாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை.

இவர் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை என்பதால், நாளைய தினம் அவர் ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *