கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர்

481462791_960879146189787_7651706900348846173_n.jpg

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதியின் துப்பரவுப் பணிமுன்னெடுப்பு

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அதன் ஒரு அங்கமாக கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதி புதன்கிழமை(05.03.2025) துப்பரவு செய்யப்பட்டன. மிக நீண்டகலமாக குறித்தவீதியின் இருமருங்குகளும் பற்றக்காடுகளால் சூழப்பட்டிருந்த நிலையில் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் இதன்போது கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பற்றகைள், துப்பரவு செய்து வைக்கப்பட்டன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இளைஞர் சேவை உத்தியோகஸ்த்தர் த.சபியதாஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பிரதேச சபைச் செயலளார் எஸ்.சுபராஜன், இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், சமூத்தி முகாமையாளர் உதயகுமார், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் தெ.நவநாயகம், மற்றும் கிராமசேவை உத்தியோகஸ்த்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதி ஆலயங்களின நிருவாகத்தினர், இளைஞர் யுவதிகள், சமூர்த்தி பயனாளிகள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு குறித்த வீதியின் துப்பரவுப் பணியில் ஈடுபட்டடிருந்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *